‘கறுப்பர் கூட்டம் ஆனாலும் சரி, காவி கோடி பிடிப்பவர்களானாலும் சரி’ – எச்சரிக்கும் அம்மா நாளிதழ்!

Default Image

அதிமுகவின் அம்மா நாளிதழ் வேல் யாத்திரை நடத்தும் பாஜக-வினரை மறைமுகமாக எச்சரித்துள்ளது.

பாஜக கட்சி சார்பில் நவம்பர்  6-ம் தேதி முதல் டிசம்பர்  6-ம் தேதி வரை யாத்திரை நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த யாத்திரை   நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி  பாஜக-வினர் யாத்திரை நடத்தினர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் காண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில்,  இதுகுறித்து அதிமுகவின் அம்மா நாளிதழ் வேல் யாத்திரை நடத்தும் பாஜக-வினரை மறைமுகமாக எச்சரித்துள்ளது. அதன்படி, ‘மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவது அதிமுக அனுமதிக்காது. சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட அதிமுக இதை அனுமதிக்காதுஎன்பதை யாத்திரை செல்வோர் உணர வேண்டும்.

சாதி மதத்தால் மக்களை பிளவுபடுத்தும் உள்நோக்கம் கொண்ட யாத்திரை, ஊர்வலங்களை தமிழகம் ஆதரிக்காது. அமைதி தவழும் தமிழகத்தில், மக்கள் பின்பற்றும் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை உணர்ந்து நடக்க வேண்டும். அது கருப்பர் கூட்டம் ஆனாலும் சரி காவி கொடி பிடிப்பவர்கள் ஆனாலும் சரி.’ என்று குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்