பாஜகவின் வேதப்புத்தகம் பகவத்கீதை அல்ல – ஜோதிமணி எம்.பி

Default Image

மனுநீதியும்,பாஜகவும் மனிதகுல விரோதிகள் என ஜோதிமணி எம்.பி ட்வீட். 

திமுக எம்.பியும், துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்துக்கள் மற்றும் சூத்திரர்கள் தொடர்பாக மனு தர்மத்தைச் சுட்டிக்காட்டிப் பேசியது கடும் சர்ச்சையான நிலையில், ஆ.ராசாவின் பேசியதற்கு எதிராக பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும், இந்து அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாஜகவின் வேதப்புத்தகம் பகவத்கீதை அல்ல. மனுநீதியே. மனுநீதி பெண்களை பிறபடுத்தப்பட்ட, தலித் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களை இழிவுபடுத்துவது. அடிமைகளாக கட்டமைப்பது. சுயமரியாதையும், கண்ணியமும் மிகுந்த எந்த சமூகமும் மனுநீதியை ஏற்கமுடியாது. மனுநீதியும்,பாஜகவும் மனிதகுல விரோதிகள்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்