பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் சகோதரர் நயினார் வீரபெருமாள் அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுகவில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்றும் மற்றொரு தரப்பின் கூட்டணியை முறிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
கூட்டணி முறிவு அல்லது கூட்டணி தொடர பாஜகவுக்கு நிபந்தனை விதிப்பது பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. கூட்டணி இல்லை என ஜெயக்குமார் திட்டவட்டமாகக் கூறும் அதே நேரத்தில், அதிமுக – பாஜக இடையே எந்த பிரச்னையும் இல்லை என செல்லூர் ராஜு பேட்டி அளித்ததால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால், இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுக – பாஜக இடையே மோதல் உச்சமடைந்துள்ள நேரத்தில், தமிழக பா.ஜ.த துணைத் தலைவரும், சட்டமன்றக்குழு தலைவருமான நயினார் நாகேந்திரனின் சகோதரர் நயினார் வீரப்பெருமாள் அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதுபோன்று, தென்காசி முன்னாள் எம்பி வசந்தி முருகேசனும் அதிமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…