பெரியார் சிலையை வேறு இடத்தில் வைப்பது தான் பாஜகவின் தேர்தல் வாக்குறுதி – அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திருவண்ணாமலையில் அறநிலையத்துறை ஒருதலை பட்சமாக தான் செயல்படுகிறது. எங்களை பொறுத்தவரை அறநிலையத்துறையை எதிர்ப்பதற்கான காரணம் எங்களுக்கு இருக்கிறது.
ஸ்ரீரங்கம் கோயில் முன்பதாக உள்ள பெரியார் சிலையை வேறு இடத்தில் வைப்பது தான் பாஜகவின் தேர்தல் வாக்குறுதி. தமிழகத்தில் ஊழல் மற்றும் லஞ்சம் அதிகரித்துவிட்டது. ரூ.5344 கோடி மதிப்பிலான கோயில் சொத்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுகிறார். எத்தனை சொத்துக்கள் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் மீட்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரியார் சிலையை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு உரிய மரியாதையுடன் நிறுவுவோம். பொது இடத்தில பெரியார் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், கோயில் முன் இருக்க கூடாது.
இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் நிதிஷ்குமாரை கண்டிக்கவில்லை – வானதி சீனிவாசன்
கொக்கு, மீன் என பேசும் அரசியல் தலைவர்கள், இன்று அந்த கொக்குக்கு இருக்கக்கூடிய பொறுமை அரசியல் தலைவர்களிடம் இல்லை. காத்திருந்த மீனை பிடிக்கும் திறன் கொக்குக்கு உள்ளது. அதேபோல பாஜக காத்துக் கொண்டிருக்கிறது. எங்களுக்கான நேரம் 2026 என்பது எங்களுக்கு முழுமையாக தெரியும்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் கடனால், தமிழகத்தில் பெரிய அளவிலான பிரச்னை வெடிக்க போகிறது. வீணாக மத்திய அரசின் மீது தமிழக அரசு பழி போடுகிறது. என் மக்கள் யாத்திரை 103 தொகுதிகளை கடந்த நிலையில் யாத்திரையின் நிறைவு நாளில் பிரதமர் மோடி தமிழகம் வர வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.