இந்தி-இந்துத்துவா என்ற பாஜகவின் கனவு பகல்கனவாகவே போகும் – அமைச்சர் மனோ தங்கராஜ்

Default Image

400 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த இந்தியை திணிப்பதன் அவசியம் என்ன? என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட். 

குமரியில் திமுக சார்பில் இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், குமரி மே.மா திமுக சார்பில் நடைபெற்ற இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டது இந்தி திணிப்பிற்கு எதிராக இன்னும் தமிழ் மக்களின் மனதில் தகழும் அனலை வெளிப்படுத்தியது.

5000 ஆண்டுகள் தொன்மையுடைய தமிழ் மொழியுடன் ஏனைய 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்குங்கள் என்பதே எமது கோரிக்கை, அதை விடுத்து 400 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த இந்தியை திணிப்பதன் அவசியம் என்ன? இந்தி-இந்துத்துவா என்ற பாஜகவின் கனவு பகல்கனவாகவே போகும் என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்