பாஜகவின் சதி முயற்சிகள் 3 மாநிலங்களில் எடுபடவில்லை- திருமாவளவன்..!
நல்லாட்சியை வழங்கக்கூடிய ஆற்றல் ஸ்டாலினுக்கு உண்டு என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிலும், குறிப்பாக 2 பொதுதொகுதி, 2 தனி தொகுதிகளில் விசிக வெற்றி பெற்றது.
இந்நிலையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க ஸ்டாலினுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் , கூட்டணியை சிதற விடாமல் மாபெரும் வெற்றியை ஸ்டாலின் ஈட்டியிருக்கிறார். ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை வழங்குவதே லட்சியம் என கூறியிருக்கிறார்.
நல்லாட்சியை வழங்கக்கூடிய ஆற்றல் ஸ்டாலினுக்கு உண்டு. ஸ்டாலின் சந்திக்கக்கூடிய முதல் சவால் கொரோனா என தெரிவித்தார். நல்லாட்சியை வழங்க ஸ்டாலினுக்கு விசிக முழு ஒத்துழைப்பு வழங்கும். தொடர்ந்து பேசிய அவர் கேரளாவில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றிபெற முடியவில்லை. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய பெரிய மாநிலங்களில் பாஜகவுக்கு தோல்வி.
தமிழகத்தில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். மேற்குவங்கத்தை கைப்பற்ற பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது என கூறினார்.