தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியாக வாய்ப்பு.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கி, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 10ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகள், திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி தனி, கோவை தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம் தனி, மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
இதனிடையே, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக பாஜக மாநில தலைவர் எல் முருகன் டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…