கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற இருந்த பந்த் ஒத்திவைக்கப்படுவதாக பாஜக அறிவித்துள்ளது.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, திமுக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து பாஜக சார்பில் அக்டோபர் 31ஆம் தேதி பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த பந்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதில் பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பு பாஜக பந்திற்கு யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. அந்த பாஜக செயற்குழு உறுப்பினர் அறிவித்த பந்திற்கு பாஜக மாநில கமிட்டி அனுமதி அளிக்கவில்லை என கூறினார்.
இதனை அடுத்து, பந்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நேர்ந்தாலோ, அல்லது அதற்கான முகாந்திரம் இருந்தாலோ காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்து வழக்கை தள்ளிவைத்தது.
இதனை அடுத்து பாஜக சார்பில் நாளை மறுநாள் (அக்டோபர் 31இல்) நடத்தப்பட இருந்த பந்த் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிகர்கள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் இந்த பந்த் போராட்டம் காரணமாக பாதிக்கப்படுவதாலும், மக்களுக்கு இடையூறு ஏற்பட கூடாது என மாநில தலைவரிடம் கேட்டுக்கொண்டதன் பேரில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…