கோவை விமான நிலையம் அருகே திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி பாஜக மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திமுக எம்.பி ஆ.ராசா சில வாரங்களுக்கு முன்னர் மனுஸ்மிருதி பற்றி தனது கருத்துக்களை ஒரு விழாவில் பேசியிருந்தார். இந்த கருத்துக்கு பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக சில ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் நீலகிரி எம்பி ஆ.ராசா, இன்று கோவை விமான நிலையத்திற்கு வந்திறங்கினார்.
ஆ.ராசாவை கண்டித்து கோவை விமானநிலையத்தில் இருந்து காலப்பட்டி செல்லும் சாலையில் பாஜக மகளிர் அணியினர் கருப்புகொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஏதேனும் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுவர் என கூறப்படுகிறது.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…