தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக மகளிர் அணி..!
அனைத்து நாட்களிலும் கோவிலை திறக்க வலியுறுத்தி தீச்சட்டி ஏந்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் திருக்கோவில்களில் வெள்ளி சனி, ஞாயிறு நாட்களில் பக்தர்கள் இன்றி செயல்படுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த தடையை நீக்கப்படவேண்டும் அனைத்து நாட்களிலும் ஆலயம் செல்ல அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் இன்று புகழ் பெற்ற கோயில்கள் முன்பாக பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
அதன்படி, இன்று பிரசித்திப் பெற்ற 12 கோவில்கள் முன் பாஜகவினர் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோவிலை திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தீச்சட்டி ஏந்தி பாஜக மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பள்ளி, கல்லூரி, திரையரங்கம் , கடற்கரை, மால்கள், பேருந்து என அனைத்தும் சுமூகமாக நடக்கும்போது வழிபாட்டிற்கு மட்டும் திமுக அரசு ஏன்..? தடை விதிக்கிறது என பாஜக சார்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.