BJP: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா… அனைவரையும் பாராட்ட வேண்டும் – அண்ணாமலை

Tamilnadu BJP President Annamalai

புதிய நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. புதிய நாடாளுமன்றத்தின் முதல் அலுவலக பணியாக, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் வரை இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மகளிருக்கு அளிக்கும் 33% இட ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு பட்டியலின பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும்.

15 ஆண்டுகளுக்கு இந்த மசோதா அமலில் இருக்கும் என அறிவித்தார். இந்த சட்ட மசோதா மீதான விவாதம் கலந்து செவ்வாய்க்கிழமை மற்றும் நேற்று என இரண்டு நாட்கள் நடைபெற்றது.  இரண்டு நாட்களும் இந்த மசோதா பற்றி எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துகளை கூறினாலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பெரும்பாலான எதிர் கட்சிகள் இந்த மசோதாவிற்கு தங்கள் ஆதரவையே தெரிவித்தனர். இதன்பின், நேற்று மகளிர் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவானது மக்களவையில் பெருவாரியான வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

மொத்தமுள்ள 545 உறுப்பினர்களில் 454 உறுப்பினர்கள் இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 2 பேர் மட்டும் எதிர்த்து வாக்களித்தனர். இதன்மூலம் மக்களவையில் இந்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாஜக கட்சியில் எப்போதுமே பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு இருக்கிறது.

பாஜக கட்சியில் உள்ள அணிகள் உள்ளிட்ட அனைத்திலும் 33% பெண்களுக்கு ஒதுக்கீடு வைத்திருக்கக்கூடிய ஒரே கட்சி பாஜக தான். நம்ம ஆட்சி பெண்களை மையப்படுத்தி உள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு அணைத்து அரசியல் கட்சிகளையும் பாராட்டவேண்டும். ஏனென்றால். அனைவரும் மசோதாவை வரவேற்றுள்ளனர். விரைவில் தமிழக சட்டசபை. லோக் சபாவில் 33% பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலை அடுத்து, நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பணிகளுக்கு பிறகு இந்த மசோதா அமலுக்கு வரும் என்றார். மேலும், 50 ஆண்டுகளாக தொகுதி மறுவரையறை செய்யப்படவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மூலம் எந்த சதியும் மத்திய பாஜக அரசு தீட்டவில்லை எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்