குழந்தைகளை துன்புறுத்திய பாஜக பெண் நிர்வாகி கைது.!
மழலையர் பள்ளிக்கு வந்த குழந்தையை துன்புறுத்திய பாஜக பெண் நிர்வாகி மீனாட்சி என்பவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை வில்லிவாக்கத்தில் மழலையர் பள்ளியில் குழந்தைகளின் கை, கால்களை கட்டி துன்புறுத்திய, பள்ளியின் உரிமையாளரும், பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான மீனாட்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜாஜி நகரைச் சேர்ந்த சரண்யா என்பவரின் குழந்தை கை, கால்களை கட்டிப் போட்டு துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. சிறுவனை துன்புறுத்தியதுடன், அதனை கேட்க சென்ற தாய் சரண்யாவை மிரட்டியது சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரியவந்தது.
இந்நிலையில், மீனாட்சி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 7 மாதங்களாக மழலையர் பள்ளியில் சிறுவன் படித்து வரும் நிலையில், துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது.