ஈரோடு இடைத்தேர்தல்.! பாஜக நிலைப்பாடு குறித்த முக்கிய ஆலோசனை.!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து நாளை கடலூரில் பாஜக ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, அதிமுக கட்சியினர் , தமாகா தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதே போல அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவினருடனும் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்நிலையில், ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வது பற்றி பாஜக முக்கிய நிர்வாகிகள் பாஜக முக்கிய பொறுப்பாளர் சிடி.ரவி தலைமையில் நாளை கடலூரில் ஆலோசனை நடத்த உள்ளார்.
அந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகே , அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதா.? அல்லது, தேர்தலை நேரடியாக எதிர்கொள்வதா என்பது பற்றி பாஜக முடிவு செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் 14 பேர் கொண்ட தேர்தல் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.