தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என புதிய மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும். வயது முக்கியமல்ல, மூத்த, இளம் தலைவர்கள் என அனைவரையும் அரவணைத்து செல்வேன். மற்ற கட்சிகள் தனிநபர் கட்சிகள், பாஜகவைப் பொறுத்தவரை கூட்டுமுயற்சிதான்.
வயது, அனுபவம் என பல்வேறு விஷயங்களைக் கொண்டு பாஜக பொறுப்பளித்து வருகிறது என்றும் பாஜக தனி மனிதரை முன்னிருத்தும் கட்சியல்ல, அனைவருடன் இணைந்து பணியாற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து தமிழக பாஜக புதிய தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.
துணை தலைவராக இருந்த அண்ணாமலை, புதிய தலைவராக நியமித்ததை அடுத்து, சென்னை, தி.நகரில் உள்ள கட்சி அலுவலகமான கமலாலயத்தில், வரும் 16ம் தேதி, தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…