பாஜகவினர் கண்டிப்பாக வருவார்கள் – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

Default Image

பாஜக – அதிமுக இடையேயான கூட்டணி உறவில் எந்த பிளவும் இல்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதிமுக சார்பாக விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ்  போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது .
இந்த நிலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இது குறித்து கூறுகையில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நீடிக்கும்.பாஜக – அதிமுக இடையேயான கூட்டணி உறவில் எந்த பிளவும் இல்லை. பாஜகவினர் கண்டிப்பாக தேர்தல் பரப்புரைக்கு வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்