வேலயாத்திரை நிறைவடைந்ததை தொடர்ந்து, 2021-ல் பாஜக தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
கடந்த ஒருமாதமாக பாஜக சார்பாக நடைபெற்று வந்த வேல் யாத்திரை இன்று திருச்செந்தூரில் நிறைவுபெற்றது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த அரசு அனுமதி மறுத்தது. இருப்பினும், எல். முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடைபெற்றது. தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
மழை மற்றும் புயலால் நிறுத்தப்பட வேல்யாத்திரை மீண்டும் சமீபத்தில் தொடங்கப்பட்டது. திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூர் வரை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்குக்கும் வேல் யாத்திரையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் எல். முருகன்.
வேலயாத்திரை நிறைவுபெற்றதை தொடர்ந்து 2021-ல் பாஜக தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறும். தமிழகத்தில் பாஜகவுக்கு இவ்வளவு ஆதரவு இருக்கின்றதா என அனைவரும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு வேல் யாத்திரை அமைந்துள்ளது. இது வெற்றியின் தொடக்கம் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…