விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்க பிஜேபி நினைக்கிறது. அதிமுகவின் நோக்கமும் இதுதானா? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், மத்திய அரசு ரூ.10,000 கோடி செலவில் 277 கி.மீ தொலைவிற்கு சேலம் – சென்னை இடையே 8 வழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதனால் விவசாய நிலம், காடுகள், நீர் நிலைகள் பாதிக்கும் என கூறி இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, பொதுமக்கள், நில உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிலம் கையகப்படுத்த தடை விதித்தது. நிலம் கையகப்படுத்துவதற்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எட்டு வழி சாலை திட்ட செயல் இயக்குனர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை ஏற்று விசாரித்த உச்சநீதிமன்றம், மேல்முறையீடு மனு உள்ளிட்ட மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் மாதம், 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், “சேலம் 8 வழிச்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்கிறது மத்திய அரசு” என தெரிவித்த அவர், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமான விளை நிலங்களை இழப்பதோடன்றி, காடுகளும் அரிய வகை உயிரினங்களும் அழிக்கப்படும் இத்திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்த பதிவில் தெரிவித்தார்.
மேலும் அந்த பதிவில், “விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்க பிஜேபி நினைக்கிறது. அதிமுகவின் நோக்கமும் இதுதானா?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…