“பாஜகவிற்கு எதிர்க்கட்சியாக வர ஆசை வந்திருக்கிறது”- அமைச்சர் கடம்பூர் ராஜூ!

Default Image

தமிழகத்தில் பாஜகவிற்கு எதிர்க்கட்சியாக வர ஆசை வந்திருக்கிறது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழகத்தில் 2-வது இடத்திற்கு வருவதற்குதான் திமுக – பாஜக இடையே போட்டி என்று வி‌‌.பி. துரைசாமி கூறியிருக்கலாம் என கூறிய அமைச்சர், 2011 -ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக எதிர்க்கட்சியானது போல தற்பொழுது பாஜகவிற்கு எதிர்க்கட்சியாக வர ஆசை வந்திருக்கிறது என தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, மு.க.ஸ்டாலின், கனிமொழியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை,‌ கனிமொழி மு.க.ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை எனவும், கனிமொழிக்கு போட்டியாக உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப் படுத்தப்படுகிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 17042025
TVK Booth Committee
Madurai Temple Festival
amit shah edappadi palanisamy selvaperunthagai
sanju samson injury
santhanam and str
BJP Former state leader Annamalai - TN Minister Sekarbabu