சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.
சட்டப்பேரவையில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
வரலாற்று ரீதியாகவே ஆதி திராவிடர் வகுப்பினராக இருக்கும்போது அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமையை வழங்குவதே சரியானது. மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு.
ஆனால் ஜாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல ஜாதி ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே ஜாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம்தான் சமூகநீதித் தத்துவம் என முதல்வர் பேசியிருந்தார்.
இந்த நிலையில், வானதி சீனிவாசன் கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கு இடஒதுக்கீடு கோரும் முதல்வரின் தீர்மானம் மீதி வானதி சீனிவாசன் பேசியிருந்தார். வானதி சீனிவாசனின் பேச்சை அவை குறிப்பிலிருந்து நீங்கியதால், பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளும் திமுக அரசு, வேங்கை வயல் பிரச்னை, பட்டியலின மக்களின் பஞ்சமி நிலத்தை மீட்பதற்கான சிறப்பு சட்டம், ஒவ்வொரு வாரமும் கௌரவ கொலைகள் தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது அதனை தடுப்பதற்கான சட்டம் இவற்றை பற்றி கவலைப்படமால், முழுக்க, முழுக்க அரசியல் நோக்கத்தில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…