அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டலுக்கு பா.ஜ.க. அஞ்சாது – வானதி சீனிவாசன்
பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே அக்டோபர் 31-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது என வானதி அறிக்கை.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சமத்துவம் தொடர்பாக பாஜக தரப்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வானதி சீனிவாசன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டலுக்கு பா.ஜ.க. அஞ்சாது. பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே அக்டோபர் 31-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
கோவையில் எந்த பதற்றமும் இல்லை. இயல்பு நிலை தான் நீடிக்கிறது’ என்றால் 3,000 போலீசார் எதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். 0 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து ஏன் கண்காணிக்க வேண்டும்.மாநிலம் கடந்தும் ஏன் விசாரணை நடத்த வேண்டும்; அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னை அறியாமலேயே,கோவை பதற்றத்தில் இருப்பதை ஒப்புக்கொண்டார்.
முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று வணிகர்கள், தொழில் துறையினரை அமைச்சர் மிரட்டி இருப்பதாகவும் தகவல் வருகிறது. முழு அடைப்பு போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தான் அமைச்சர் கோவைக்கு வந்திருக்கிறார் என்பது அவரது பேட்டியிலிருந்து தெரிகிறது என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டலுக்கு பா.ஜ.க. அஞ்சாது
‘பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தவே அக்டோபர் 31-ம் தேதி முழு அடைப்பு போராட்டம்..https://t.co/myozvudiB8 pic.twitter.com/QxynODLPnz
— Vanathi Srinivasan (@VanathiBJP) October 28, 2022