அதிமுக தலைமையிலான கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சேலம் சீலநாயக்கன்பட்டியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று புதிய வரலாற்றை படைக்க வேண்டும். எதிரணியில் இருப்பவர்கள் கொள்கை அடிப்படையில் இணைந்தவர்கள் அல்ல, அதிமுக தலைமையிலான கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதிமுக மீது சவாரி செய்து தமிழகத்தில் வலிமை பெறலாம் என பாஜக பார்க்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லை என்ற நிலையை பயன்படுத்தி தமிழ்நாட்டில் காலூன்றி விடலாம் என பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை. தமிழகத்தை பாஜகவிடம் அடகு வைத்திருக்கிற அதிமுகவிடம் இருந்து மீட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார்கள் என்றும் அதிமுக, பாமக என யார் வெற்றி பெற்றாலும் அவர்கள் பாஜகதான் என கூறி, அதிமுக தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…