பாசிச பாஜக…..விடாத பாசிச பாசம்………..சோபியாவை மிரட்டிய தமிழிசை……போடு 4 பிரிவுகளில் வழக்கு…….. நீதிமன்றம் அதிரடி….!!!
மாணவி சோபியாவுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவி சோபியாவுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நவ.20க்குள் அறிக்கையளிக்க தூத்துக்குடி ஜே.எம்.3 நீதிமன்றம் உத்தரவு.
கடந்த மாதம் 3ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிக்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு நேற்று விமானத்தில் சென்றார்.
அவர் சென்ற அதே விமானத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த சோபியா என்ற மாணவியும் பயணித்தார் இவர் கனடாவில் உள்ள மாண்ட்ரியல் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப்படிப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் தரை இறங்கிய நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் மாணவி சோபியா தன்னுடைய கையை உயர்த்தி பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கோஷமிட்டார் என்று சொல்லப்படுகிறது.இந்த பாசிச கோஷம் பாச சண்டையாக மாறி விமான நிலையத்திலே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் ஆத்திரமைடைந்த தமிழிசை இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் மாணவி சோபியா மீது மூன்று பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அன்றே மாணவியை கைது செய்யப்பட்டார்.மறுநாள் நீதிமன்ற நீதிபதி அறிவுறுரையின் படி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சோபியாவின் தந்தை பாஜக தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜகவினர் தன் மகளை மிரட்டியதால் அவர்களை பெண்கள் வதை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவர் செய்த இந்த மனு மீதான விசாரணையில் தூத்துக்குடி நீதிமன்றம் தமிழிசை சவுந்தர ராஜன் மீது இ.த.ச.341,294 (b), 506 ( 1 ) மற்றும் பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வதை தடுப்புச் சட்டம் ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யவும், அதன் அறிக்கையை அடுத்த மாதம் 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.
மேலும் இந்த பாசிச பாஜக என்ற முழக்கம் ட்விட்டர்,ஃப்ஸ்புக் போன்ற சமூக வலைதலங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.தமிழிசையை இந்த பாசிச பாசம் விடுவதாகயில்லை.பாசத்தில் சிக்கிவார என்று பார்ப்போம்.
DINASUVADU