இப்படியே இருந்தால் தமிழுக்கு சமாதி கட்டிவிடுவார்கள்.! – அண்ணாமலை பேச்சு.!
பல தமிழ்வழி கல்வி பள்ளிக்கூடங்கள் தற்போது மூடப்பட்டு வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழுக்கு சமாதி கட்டிவிடுவார்கள்.’ என ஹிந்தி திணிப்பு தீர்மானம் குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
இந்த வாரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இன்று செய்தியாளர்கள் கேட்டனர்.
இதுகுறித்து பேசிய அண்ணாமலை, ‘ இந்திய அளவில் அதிகம் பொறியாளர்களை உருவாக்கும் மாநிலமான தமிழகத்தில் தமிழ் பாடம் பயிற்று மொழியாக உள்ளதா? தமிழ் மொழியில் தான் கற்பிக்க வேண்டும் என அரசாணையை பிறப்பித்துள்ளதாக திமுக அரசு?’ என கேள்வி கேட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், ‘ கட்டாய தமிழ்வழி கல்வி கொண்டுவந்து அரசாணை வெளியிடுங்கள் அதனை நாங்கள் வரவேற்கிறோம். பல தமிழ்வழி கல்வி பள்ளிக்கூடங்கள் தற்போது மூடப்பட்டு வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழுக்கு சமாதி கட்டிவிடுவார்கள்.’ என ஹிந்தி திணிப்பு தீர்மானம் குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசினார்.