அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சியா? கேள்விக்கு நயினார் நாகேந்திரன் கொடுத்த ரியாக்சன்!
ஊடக நண்பர்கள் உங்ளுடைய சந்தேகங்களை கிளப்பி பிளவு படுத்துவதை கைவிடுங்கள் என கூட்டணி ஆட்சி குறித்த கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.

சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன. கூட்டணி இணைந்தது ஒரு பக்கம் விமர்சனங்கள் ஓடி கொண்டு இருக்கும் சூழலில், தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமையுமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. அதற்கு பாஜக மழுப்பலான பதிலை அளித்தாலும், அதிமுக, கூட்டணி அரசுக்கு வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக கூறி வருகின்றது.
இந்த சூழலில் இது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் ” வழக்கமாக நீங்களே எதோ கேள்விகளை வைத்திருப்பீர்கள். அந்த கேள்வியை நானே சொல்கிறேன். கேள்வியை நீங்கள் கேட்கவே வேண்டாம் உங்களுடைய மனதில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியும். எனவே, கேள்வி கேட்க உங்களுக்கு இடம் கொடுக்காமல் நானே பதில் சொல்கிறேன்.
எங்களுடைய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் எங்களுடைய கூட்டணியை ஏற்றுள்ள அண்ணன் எடப்பாடி அவர்கள் இருவரும் என்ன முடிவு எடுப்பார்களோ அது நடக்கும். எனவே, தேவையில்லாமல் பத்திரிக்கையாளர்கள் ஊடக நண்பர்கள் உங்ளுடைய சந்தேகங்களை கிளப்பி பிளவு படுத்துவதை கைவிடுங்கள் என்பதையும் நான் இந்த நேரத்தில் கேட்க்கொள்கிறேன். இனிமேல் யாரிடமும் இது குறித்த கேள்வியை கேட்காதீர்கள்” எனவும் நயினார் நாகேந்திரன் பேசிவிட்டு சென்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025