தாராபுரத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பாஜக மாநில தலைவர் எல் முருகன்.!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல் முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, அதற்கான தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல் முருகன் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எல் முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியல் சார் ஆட்சியரிடம் சற்றுமுன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் கயல்விழி செல்வராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் ரஞ்சிதா, அமமுக சார்பில் கலாராணி ஆகியோரும் தாராபுரம் தொகுதியில் போட்டியிடுகின்றனர். இதனிடையே, கடந்த 2011ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் எல் முருகன் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த பிறகு, தற்போது தாராபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதுபோன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஷ்பு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே, தாராபுரம் தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல் முருகன் போட்டியிடும் நிலையில், நேற்று திமுக, மதிமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.