நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகிய நிலையில் திமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் திமுகவின் வெற்றியை திமுக தொண்டர்கள் பலர் கொண்டாடி வரும் நிலையில்,எடப்பாடி பழனிச்சாமி திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்களும் வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான ஆதரவை பெற்ற திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார்.
அவர்களுக்கு தமிழக பாஜக சார்பில் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தமிழக மக்களின் உயர்வுக்கும் தாங்கள் எடுக்கும் சிறப்பான நடவடிக்கைகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் ஒத்துழைப்பு எப்பொழுதும் முழுமையாக இருக்கும் என தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…
வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று…
பெங்களூரு: பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2…
உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் கரம் மசாலாவை எப்படி தயாரிப்பது என்றும், அதன் மருத்துவ பலன்கள் பற்றியும் இச்செய்தி குறிப்பில்…
சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் நேற்றைய தினம் வெளிவந்த "விடுதலை 2" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை…
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…