தமிழிசை செளந்தரராஜனை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை!
தமிழிசை சௌந்தரராஜன் : தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று முன்னாள் ஆளுநரும், பாஜக வேட்பாளராக போட்டியிட்ட தமிழிசை சௌந்தர்ராஜனை திடீரென நேரில் சந்தித்துள்ளார்.
முன்னாள் ஆளுநரும், பாஜக வேட்பாளராக போட்டியிட்ட தமிழிசை சௌந்தர்ராஜன் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில், தமிழிசை மற்றும் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் நீடிப்பதாக கடந்த சில நாட்களாகவே, செய்திகள் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் அண்ணாமலை குறித்தும் பேசியும் இருந்தார்.
அதே சமயம் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா நடைபெற்ற நிலையில் அப்போது அமித் ஷா தமிழிசை சௌந்தர்ராஜனை அழைத்து கண்டித்தது போலவும் ஒரு வீடியோ காட்சி வைரலாக பரவியது. இதனையடுத்து, அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக தமிழிசை சௌந்தர்ராஜனை எக்ஸ் வலைதள பக்கத்தில் ” அமித் ஷா என்னை மேடையில் இருக்கும்போது அழைத்து தேர்தலுக்குப் பிந்தைய பணிகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி கேட்டார்.
நேரமின்மை காரணமாக, மிகுந்த அக்கறையுடன் அரசியல் பணிகளைத் தீவிரமாக செய்யுமாறு என்னை அறிவுறுத்தினார். தேவையற்ற வதந்திகள் பரவுவதால் நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்” என விளக்கம் கொடுத்து இருந்தார். இருப்பினும், தமிழிசை சௌந்தர்ராஜனை பற்றி அண்ணாமலை ஆதரவாளர்கள் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தும் வந்தார்கள்.
இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் அண்ணாமலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் வீட்டிற்கு சென்று இன்று அவருடன் சந்திப்பு நடத்தி இருக்கிறார். வீட்டில் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அண்ணாமலை கூறியதாவது ” இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், பாஜக மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.
தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது” என அண்ணாமலை கூறியுள்ளார். இதன் மூலம் இவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெரிய வந்து இருக்கிறது.
இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், @BJP4Tamilnadu மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா திருமதி @DrTamilisai4BJP அவர்கள் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.
தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக… pic.twitter.com/q22Iz7mYlv
— K.Annamalai (@annamalai_k) June 14, 2024