மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்.! அண்ணாமலை பேட்டி.!

BJP State President Annamalai

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முழுதாக வரவில்லை. இருந்தாலும் மக்கள் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தபால் வாக்குகள் முதல், அடுத்து எண்ணப்பட்ட வாக்கு இயந்திர வாக்குகள் வரையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் உள்ளார். பாஜகவின் NDA கூட்டணி சார்பாக களமிறங்கிய பாமக வேட்பாளர் சி.அன்புமணி தொடர்ந்து இரண்டாம் இடமே பெற்றுள்ளது.  இதனால் திமுக வெற்றிபெறுவது ஏறக்குறைய உறுதியாகி திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் முடிவுகளை இப்போதுதான் நான் பார்க்கிறேன். இடைத்தேர்தல் முடிவு என்பது தமிழக மக்கள் மனநிலை என்று நினைத்தால் அது தவறு.

தேர்தல் முடிவில் மாற்று கருத்துகள் இருந்தாலும், நடைபெற்றது தேர்தல். மக்கள் வாக்களித்துள்ளனர். இது அவர்களின் முடிவு. அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆளும் கட்சியின் பல்வேறு தடைகளையும் மீறி வாக்களித்த மக்களளுக்கு நன்றி. இவ்வளவு வாக்குகள் எங்களுக்கு கிடைத்துள்ளது என்பதும் எங்களுக்கு சாதனை தான்.

ஆனால், முன்னர் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்று, பின்னர் பொதுத்தேர்தலில் அதே கட்சி தோற்றுள்ள வரலாறு உள்ளது. இடைத்தேர்தல் முடிவுகள் தான் தமிழக மக்களின் மனநிலை என்று அமைச்சர்கள் நினைத்தால், 2026 சட்டமன்ற தேர்தல் ரிசல்ட் வேறுமாதிரியாக இருக்கும்.

இதுவரை நடந்த இடைத்தேர்தலில் 87 சதவீதம் ஆளும் கட்சி தான் ஜெயித்துள்ளது. ஆனால், அடுத்து நடந்த பொதுத் தேர்தலில் ரிசல்ட் மாறியுள்ளது. இதுதான் தமிழக மக்கள் எண்ணம் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்