தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பாலில், கொழுப்புசத்து அளவு குறைக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இதனை தொடர்ந்து, ஆவின் நிறுவனத்தின் பால் தரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், இதுதொடர்பாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் அளித்து இருந்தார்.
அவரது பதிலில், ஆவின் பால் பாக்கெட்டில் இருந்து இந்த ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லை. ஆவின் பாலை குறை கூறிவிட்டு, வடமாநில பால் நிறுவனத்தை தமிழகத்திற்கு கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இதற்காக லஞ்சம் பெற்றுள்ளார்கள் என கூறியிருந்தார் அமைச்சர். அமைச்சரின் பதிலுக்கு அண்ணாமலை கூறுகையில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள். உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன்.
மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கார் பரம்பரை அல்ல.! அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி.!
திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும். உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஆவேசமான பதிவை பதிவிட்டு இருந்தார் அண்ணாமலை.
இதுபோன்று மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் அகலபாதாளத்தில் உள்ளது. அமுல் இந்தியாவின் முன்மாதிரியான நிறுவனம், ஆவின் கைக்கூலிகளின் நிறுவனம். மனோஜ் தங்கராஜ் அமைச்சர் என்பதால் மரியாதை கொடுத்து பேசுகிறேன். மனோஜ் தங்கராஜ் அரசியலில் இருப்பது தமிழகத்திற்கு சாபக்கேடு. என்னால் நாவடக்கத்தை கட்டுப்படுத்த முடியாது.
முன்னாள் காவல்துறை தலைவர் நடராஜ் மீதான வழக்கை திரும்ப பெறுக.. எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்!
நான் அப்படி தான் பேசுவேன். நான் பேசுவது பிடிக்கவில்லை என்றால் காதை பொத்திகொண்டு செல்லுங்கள் என ஆவேசமாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பெரும்பான்மையான ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதுதான் கருத்து. எந்த கட்சியும் புனிதமான, சுத்தமான கட்சி என்று என்னால் ஒவ்வொருவருக்கும் சான்றிதழ் வழங்கமுடியாது.
அரசியல் கட்சிகளை பொறுத்தவரை அதிகமாக நல்லவர்கள் இருந்தால், நல்ல அரசியல். அதில், ஒருசில கெட்டவர்கள் இருந்தால் நீக்க வேண்டும் அல்லது ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இதனால், மெஜாரிட்டியை நோக்கி அனைவரும் செல்ல வேண்டும், இதுதான் நல்ல அரசியல், நல்ல அரசு என தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு அரசின் நிர்வாகம் முடங்கி போய் உள்ளது. சட்ட மசோதாக்களின் நிலை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். தவறான மசோதாக்களை தமிழ்நாடு அரசு அனுப்புகிறது. அரசியலில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பது தான் என் நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…