மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி உடன் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சந்திப்பு..!
காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தவிர்க்குமாறு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் அண்ணாமலை வலியுறுத்தல்.
தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்துகிறேன் என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். சட்டப்பேரவையிலும், த்திய அரசின் நிலக்கரி சுரங்கங்களுக்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்துள்ளார். அப்போது, காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தவிர்க்க வலியுறுத்தினார். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கோரிக்கையை பரிந்துரை செய்வதாக கூறியதாக தெரிவித்துள்ளார்.
@BJP4Tamilnadu சார்பாக கோரிக்கை மனு அளித்தோம். மாண்புமிகு அமைச்சரும் நமது கோரிக்கையைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் தலைமையிலான அரசு, விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளுக்கு என்றென்றும் துணை நிற்கும். (2/2)
— K.Annamalai (@annamalai_k) April 5, 2023