மேகதாது விவகாரம்.. கர்நாடகா பாஜகவை எதிர்த்து தமிழக பாஜக.! மாநில தலைவர் அண்ணாமலை கருத்து.!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்ளை சந்தித்து திமுக அரசு பற்றியும் , மேகதாது விவகாரத்தில் தமிழக பாஜக நிலைப்பாடு குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறுகையில், தமிழக அரசை நடத்த தெரியாதவர்கள் நடத்துகிறார்கள். என்றும், ஆளுநர் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு என்ன அதிகாரம் உள்ளது என கேள்வி எழுப்பினார்.
மேலும், மேகதாது விவகாரத்தில் தமிழக பாஜக ஒரே நிலைப்பாட்டுடன் தான் இருக்கிறது. கர்நாடகாவில் பாஜக அரசு ஆட்சியில் இருந்த போது மேகதாது அணை கட்ட அரசு முற்பட்டது. இது குறித்து மத்திய அரசுக்கு தமிழக பாஜக வலியுறுத்தியது. அதன் காரணமாக தான் அப்போது மேகதாது அணை விவகாரம் பற்றி நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.
ஆனால் காங்கிரஸ் கட்சி , கர்நாடக தேர்தல் பிரச்சாரத்திலேயே மேகதாது அணை கட்டப்படும் என தெரிவித்து இருந்தது. அதே போல, கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் கூறுகையில் கூட மேகதாது அணை கட்டப்படும் என கூறுகிறார். தமிழகத்திற்கு ஜூன் மாதம் தரவேண்டிய தண்ணீரை கூட கர்நாடக அரசு தரவில்லை என கூறினார்.