பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , தமிழகம் முழுவதும் “என் மண் என் மக்கள்” எனும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நாடாளுமன்ற தேர்தல் குறித்த பிரச்சார வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதே வேளையில் திராவிட கட்சிள் மீதும் தங்கள் விமர்சனத்தை முன் வைத்து வருகினறார்.
நேற்று முன்தினம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் “என் மண் என் மக்கள்” சுற்றுப்பயண மேடையில் பேசுகையில், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த உடன் ஸ்ரீரங்கம் கோவில் வெளியே உள்ள கடவுள் இல்லை எனும் பலகை அகற்றப்படும் அதே போல கடவுள் மறுப்பாளர் (தந்தை பெரியார்) சிலையும் அகற்றப்படும் என தெரிவித்தார்.
பெரியார் சிலை விவகாரம்.! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்.!
மேலும், பாஜக தமிழக ஆட்சி பொறுப்பை ஏற்ற நாள் தான் இந்து அறநிலையத்துறையின் கடைசி நாள் என்றும் அண்ணாமலை ஸ்ரீரங்கத்தில் பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று திருச்சியில் நடைபெற்ற “என் மண் என் மக்கள்” சுற்றுப்பயண மேடையில் அண்ணாமலை பேசுகையில், நாங்கள் பெரியார் சிலையை உடைக்க மாட்டோம். தலைவர்கள் சிலையை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு மாற்றி வைப்போம் எனவும் கோவிலுக்கு வெளியே யார் இருக்க வேண்டும், தலைவர்கள் சிலை எங்கு இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்து செயல்படுத்துவோம் என பேசியிருந்தார்.
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…
சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…