விமானத்தில் அவசரகால கதவை திறந்த விவகாரத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்தினால் மட்டுமே தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கோரினர். – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்.
கடந்த இந்த டிசம்பர் 10ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்ற இண்டிகோ விமானத்தில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பயணித்தனர். அப்போது விமானத்தின் அவசரகால கதவை எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்ததாக கூறப்பட்டு அவர் அதற்கு இண்டிகோ விமான நிறுவனத்திடம் விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த சம்பவம் குறித்து தேஜஸ்வி சூர்யா உடன் விமானத்தில் பயணித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் விவரித்து கூறினார். அதாவது, கடந்த டிசம்பர் 10ஆம் தேதி விமானம் புறப்பட்ட சமயம் புயல் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாகவே விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது எமர்ஜென்சி கதவு இருக்கும் இருக்கை பக்கம் அதாவது வலது பக்கம் தேஜஸ்வி சூர்யா அமர்ந்தார். நான் இடது பக்கம் அமர்ந்திருந்தேன். அப்போது சூர்யா விமானத்தின் இருக்கையில் அருகில் உள்ள ஏசி போன்றவற்றை அட்ஜஸ்ட் செய்து கொண்டிருந்தார்.
அப்போது தவறுதலாக எமர்ஜென்சி கதவு லேசாக திறந்து இருப்பதை சூர்யா கவனித்தார். உடனே விமான பணிபெண்ணிடம் கூறினார். விமான பணிப்பெண் விமானியை வரவைத்து கூறினார். அப்போது விமானி வந்து பார்த்துவிட்டு இன்ஜினியரை வர சொன்னார். இன்ஜினியர் வந்து லேசாக திறந்து இருந்தாலும் மொத்த கதவையும், முழுதாக கழட்டி பின்னர் பொறுத்த வேண்டும் என கூறி அதற்கான வேலைகளை செய்தார். அதன் காரணமாக பயணிகள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது சுமார் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரையில் மட்டுமே தாமதமாகி இருக்கும்.
தேஜஸ்வி சூர்யா அவர்களின் தவறு இல்லை என்றாலும், அந்த சமயமே பயணிகளிடம் நேரடியாகவே சூர்யா சென்று தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அவர் இண்டிகோ விமான நிறுவனத்திடமும் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு மன்னிப்பு கோரியதாக மட்டுமே கூறினார். அதைத்தான் மத்திய விமானத்துறை அமைச்சர் சிந்தியாவும் தெரிவித்து இருந்தார். ஆனால் இதனை எதிர்க்கட்சிகள் தான் வேண்டுமென்று பெரிதுபடுத்துகின்றனர். என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…