என் மீதான பயத்தால் என்னை ஆட்டுக்குட்டி என்கின்றனர் – அண்ணாமலை

annamalai

Annamalai: என் மீது பயம் இருப்பதால் என்னை ஆட்டுக்குட்டி என விமர்சனம் செய்கிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அத்தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது அண்ணாமலை கூறியதாவது, நடக்கவிருக்கும் தேர்தல் பிரதமர் யார் என்று தேர்வு செய்யும் தேர்தலாகும். ஆனால் மக்களாகிய நீங்கள் மீண்டும் மோடி தான் பிரதமராக வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்கள். வரும் 19ம் தேதி இந்தியாவே திரும்பி பார்க்கு வகையில் இருக்க வேண்டும். இதனால் தாமரை சின்னத்தில் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசியதாவது, என் மீது பயம் இருப்பதால் என்னை ஆட்டுக்குட்டி என விமர்சனம் செய்கிறார்கள். அமைச்சர் டிஆர்பி ராஜா போன்றவர்களால் என்னை போல வியர்வை சிந்தி உழைக்க முடியுமா? என்றும் முதலமைச்சரை 10 கிலோ மீட்டர் ரோடு ஷோ வர சொல்லுங்கள் பார்ப்போம் எனவும் கூறினார்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் போன்று முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ பேரணி செல்ல முடியுமா? எனவும் கேள்வி எழுப்பிய அவர், திமுகவினர் தேர்தலுக்கு முன் நெற்றியில் பட்டை போட்டுக் கொள்கிறார்கள், தேர்தலுக்கு பின் பட்டையை அழித்து விடுகிறார்கள் எனவும் விமர்சித்தார். மேலும், பிரதமர் மோடி குறித்து அமைச்சர் உதயநிதி அவதூறு பரப்பினால் பாஜக தக்க பதிலடி கொடுக்க தயங்காது எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்