முதுகெலும்பில்லாத காங்கிரஸ் இன்னும் கூட்டணியில் இருக்கிறது.! அண்ணாமலை கடும் விமர்சனம்.!

Default Image

பேரறிவாளன் விடுதலையானதும், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரை கட்டி அணைத்து அன்பை பரிமாறினார். அதனைக் கண்டிக்க முதுகெலும்பில்லாமல், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. – பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்.

முன்னாள் பிரதமர் ரஜீவகாந்தி கொலைவழக்கில் கைதான பேரவறிவாளன் விடுதலையை அடுத்து அதனை மேற்கோள் காட்டி, நளினி உள்ளிட்ட 6 பேர்  விடுதலையாக நேற்று உச்சநீதிமன்ற தீர்ப்பளித்து இருந்தது. இதற்கு காங்கிரஸ் தரப்பு தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தது.

இதனை குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டன அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில்,’ உச்சநீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய குற்றவாளி பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தது. பேரறிவாளன் விடுதலையைக் காரணமாகக் காட்டி, மற்ற 6 பேரையும் விடுதலை செய்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரத்தை பாஜக புரிந்துகொள்கிறது. இருந்தாலும், விடுதலை செய்யப்பட்டிருக்கும் குற்றவாளிகள், நிரபராதிகள் என்பதற்காக விடுதலை செய்யப்படவில்லை என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம். உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்புகளை வழங்கியதும், காங்கிரஸ் கட்சி காட்டும் பாசாங்குத்தனம் காட்டுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி பேரறிவாளன் விடுதலையானதும், தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவரை கட்டி அணைத்து அன்பை பரிமாறினார். அதனைக் கண்டிக்க முதுகெலும்பில்லாமல், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இன்று, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், இந்த ஆறு பேர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை அரைமனதுடன் கண்டித்தாலும் அவர்களது உண்மையான தலைமையும் அவரது பிள்ளைகளும், கடந்த காலங்களில் கடிதங்கள் வாயிலாகவும், நேரடிச் சந்திப்புகள் வாயிலாகவும், குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாகவும், அவர்களைச் சிறையில் இருந்து விடுவிப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு, தேசிய ஒருமைப்பாட்டை விட, தமிழ்நாட்டில் தேர்தல் வெற்றிகள் முக்கியமாகிவிட்டது. என அந்த அறிக்கையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்