அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் 8 உயிர்கள் பலியாகி உள்ளதற்க்கு திமுக அரசு தான் காரணம். – அண்ணாமலை குற்றசாட்டு.
ஆளும் திமுக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அவசர சட்டம் இயற்றி இருந்தது. அதற்கு ஆளுநர் ரவி கையெழுத்திட்டார். அதற்கான அரசாணையை தமிழக பிறப்பிக்கவில்லை . அதர்க்கடுத்ததாக, சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டமாக இயற்றியது. இதற்கு இன்னும் ஆளுநர் ரவி கையெழுத்திடவில்லை.
இந்த சட்டம் குறித்து ஆளுநர் ரவி தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு இருந்தார். அதற்கான விளக்கத்தை சட்ட அமைச்சர் ரகுபதி அளித்துள்ளார். இன்னும் அந்த சட்டத்திற்கு ஆளுநர் ரவி கையெழுத்திடவில்லை. இதற்குள் ஆளுநர் ரவி அவசர சட்டத்திற்கு கையெடுத்திட்டும் தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கவில்லை அதனால் தான் 8 உயிர்கள் பலியாகியுள்ளன என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காததால் எந்த தவறும் இழைக்கப்படவில்லை என்று திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பத்திரிகையாளர்களை சந்தித்து இன்று கூறியுள்ளார். ‘ என்றும்,
‘ அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிய தேதிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தேதிக்கும் இடையே 12 நாட்கள் இடைவெளி இருந்தது. அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காத காரணத்தால் தான் அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் 8 உயிர்கள் பலியாகி உள்ளது. இந்த உயிரிழப்புக்கு திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரும் தமிழக முதல்வரும் தான் பொறுப்பு.’ என தனது குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…