பிரதமராக மோடி மீண்டும் வரவேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரும்புவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், கடந்த அதிமுக ஆட்சியில் நாலரை ஆண்டுகள் பாஜகவின் தயவில் தான் இருந்தது, எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு அதிமுக ஐந்தாக உடைந்துள்ளது, ஆனால் நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறோம், இபிஎஸ் தான் சென்றுவிட்டார் என ஓபிஎஸ் கூறியது குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, இன்னொரு கட்சியின் உட்கட்சி பிரச்சனை குறித்து நாங்கள் எப்போதும் பேசமாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம். 2017 முதல் 2021 காலகட்டத்தில் அதிமுக எப்படி இருந்தது என்பது மக்களுக்கு தெரியும். நாங்கள் இன்னொரு கட்சியின் உட்கட்சி பிரச்சனையில் குளிர்காயவதில்லை. ஓபிஎஸ் கட்சியின் உள்ளே இருந்து பார்த்துள்ளார், அதனால் தான் அவ்வாறு அவரது கருத்தை கூறியுள்ளார்.
போதுமான பேருந்துகள் இல்லாதது வெட்ககேடு – அண்ணாமலை
இது அவருடைய கருத்து, அதை அவரிடம் தான் கேட்கணும். பாஜகவை பொறுத்தவரை இன்னொரு கட்சி பிரச்சனையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அதே நேரத்தில், பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது இரண்டு முறை ஓபிஎஸ் நேரில் சென்று வரவேற்பு அளித்தார். இதனால், பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்துள்ள ஒருவர் தான் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்.
எனவே, பிரதமராக மோடி மீண்டும் வரவேண்டும் என்று விரும்பும் ஓபிஎஸ்-க்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். மேலும், நாளை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சென்னை வருகிறார். அப்போது, நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, பின்னர் தெரிவிப்பதாக ஓபிஎஸ் உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…