முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கைது…!
பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் அவர்கள், மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக கல்யாணராமன் உள்ளிட்ட 2 பேரை கைது.
இன்று பல அரசியல் தலைவர்கள் மேடைப் பேச்சிலும், பொதுமக்கள் மத்தியிலும் பேச்சு பேச்சில் சிலர், மதரீதியாக பேசும் போது, சில சமயங்களில் அது சர்ச்சையை தூண்டி விடுகிறது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் சர்ச்சைகளும் எழுவதுண்டு.
இந்நிலையில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் அவர்கள், மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக கல்யாணராமன் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து காவல் துறையினர் அவிநாசி கிளை சிறையில் அடைத்துள்ளனர். சில சமயங்களில், ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் சில கருத்துக்களும் பல நேரங்களில் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.