சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் தலைவர் சரத்குமார்.!

Sarathkumar

BJP-SMK : நடிகர் சரத்குமார் தலைவராக பொறுப்பில் இருந்த கட்சி சமத்துவ மக்கள் கட்சி. இந்த கட்சி , வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டுடன் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. சரத்குமாரின் சமக, பாஜகவுடன் கூட்டணி வைத்து குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று முக்கிய முடிவை சரத்குமார் அறிவித்துள்ளார்.

Read More – தமிழக போலீஸ் கும்பகர்ணன் போல தூங்குகிறார்கள்… இபிஎஸ் கடும் குற்றசாட்டு.!

இன்று சென்னை தி நகரில் சமத்துவ மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில், சரத்குமார் மற்றும் சமக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய சரத்குமார், தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read More – திமுக கூட்டணி : நாகை, திருப்பூர் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டி.!

இது குறித்து அவர் மேலும் பேசுகையில், பெருந்தலைவர் காமராஜர் போல பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார். நான் இந்த முடிவை நேற்று நள்ளிரவு எடுத்தேன். பிறகு எனது மனைவியுடன் (ராதிகா சரத்குமார்) இதனை கூறினேன். பின்னர் கட்சி நிர்வாகிகள் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். இது சமகவின் முடிவல்ல இது ஒரு புதிய தொடக்கம்.

இதுநாள் வரையில் என்னுடன் கட்சிக்காக பயணித்த அனைவருக்கும் நன்றி. எதிர்கால இளைஞர்களுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளேன். தற்போது நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. அதனை தடுக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என்றும், சமகவை பாஜகவுடன் இணைத்த பின்னர் சரத்குமார் பேட்டியளித்தார்.

Read More –திமுக கூட்டணி – மதுரை, திண்டுக்கல்லில் சிபிஎம் போட்டி

இந்த நிகழ்வில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சரத்குமாரை தமிழகத்தில் அடைத்து வைக்க நாங்கள் விரும்பவில்லை. அவர் தேசியத்திற்கு தேவைப்படுகிறார் என பேசினார். இதன் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்