பாஜகவை வீழ்த்திய பிறகு காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
காங்கிரஸ் -திமுகவிற்கு நீண்ட இழுபறிக்கு பிறகு சற்றுநேரத்திற்க்கு முன் காங்கிரஸ் -திமுக இடையேயான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை கையெழுத்தானது. அதன்படி சட்டப்பேரவை தேர்தலில் 25 தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். திமுகவுடன் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, தொகுதிகளின் எண்ணிக்கை அரசியல் கள நிலவரத்தை பொறுத்தது, அடுத்த தேர்தலில் காங்கிரஸ் 200 தொகுதிகளில் கூட போட்டியிடும். அரசியலில் ஏற்றம்-இறக்கம் என்பது சகஜம்.
பாஜகவை வீழ்த்திய பிறகு காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம். தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் மகிழ்ச்சியும், எழுச்சியும் அளிக்கிறது. தமிழகத்தில் பாஜக கால்பதிக்க கூடாது, அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி என தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான நோயாக பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருகிறது.நோயை மற்ற கட்சிகளுக்கு பரப்பி வருகிறது. என கூறினார். திமுக கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 48 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…