ஜனநாயக அரசை மதிக்க பாஜக கற்றுக்கொள்ள வேண்டும் – அமைச்சர் மனோ தங்கராஜ்
ஆளுநரும், பாஜகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், 2 கி.மீ கூட நடக்க தகுதியற்ற அண்ணாமலை எப்படி எங்கள் தலைவரை பற்றி பேச முடியும். திமுகவினருக்கு இதை விட அநாகரீகமாக பேச தெரியும். ஆனால் நாங்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் இருக்கிறோம்.
ஆட்கள் இல்லாத கட்சியான பாஜகவை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை, பாஜக கதைக்கு ஆகாத கட்சி. ஆளுநர் அவரது எல்லையை புரிந்துகொள்ள வேண்டும். நடைப்பயணத்தை கூட ஒழுங்காக நடத்த தெரியாத கட்சிக்கு பதில் சொல்ல வேண்டி தேவை இல்லை என கூறினார். மேலும், அதிமுக மாநாடு, புரட்சி தமிழர் பட்டம் குறித்த கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி என்ன புரட்சி செய்தார் என்று சொன்னால் அதை பற்றி கேட்கலாம் எனவும் பதியளித்தார்.