புதுச்சேரியை காப்பாற்ற பாஜகவை ஓட ஓட விரட்ட வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
உத்திரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் எனும் கிராமத்தில் 19 வயது பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் நான்கு உயர்ஜாதி ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடுமையாக உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மத்திய அரசுக்கு விரோதமாகவும், உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு விரோதமாகவும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மாநிலத்தில் மகளிர் காங்கிரஸ் சார்பில் அமைதிப் பேரணி போராட்டம் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்திய படி நேரு வீதி வழியாக பேரணியாக சென்று உள்ளனர். இந்த அமைதிப் பேரணியில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டு உள்ளது. இந்த பேரணிக்கு பின்பதாக பேசிய முதல்வர் நாராயணசாமி அவர்கள் பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தேர்தலில் ஓட ஓட விரட்ட வேண்டும் அப்படி செய்தால்தான் புதுச்சேரியை காப்பாற்ற முடியும் என கூறியுள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…