எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டால் பாஜக, அதிமுகவுடன் கூட்டணிக்கு தயார் – டி.டி.வி தினகரன்
திமுகவை எதிர்க்கும் கட்சிகள் அமமுக தலைமையில் வந்தால் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகர் இல்லத்தில் சசிகலாவுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமமமுக தலைமையில் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறோம். சட்டப்பேரவை தேர்தலில் அமமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். தேர்தல் கூட்டணி முடிவானதும் தெரிவிக்கப்படும். கூட்டணி குறித்து அமமமுக நிர்வாகிகள் ஒவ்வொரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அமமுக – அதிமுக இணைப்பு குறித்த யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக மற்றும் பாஜகவை கூட்டணியில் சேர்க்க தயார் என்று கூறியுள்ளார். திமுகவை எதிர்க்கும் கட்சிகள் அமமுக தலைமையில் வந்தால் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயார் என்றும் திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே எங்கள் பிரதான நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என கூறிய அவர், அதிமுக, பாஜக எங்கள் கூட்டணியில் வர மாட்டார்கள் என்பது எல்லாருக்குமே தெரியும். எந்த கட்சி மீதும் எனக்கு ஆசை இல்லை. அமமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் மார்ச் 10 தேதி வரை விருப்ப மனு தரலாம் எனதெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு என்பது தேர்தலுக்கான அறிவிப்பாக இருக்கக் கூடாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.