மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தை கண்டித்து திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் உள்ள கமலாலயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில்,பாஜக கட்சி தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் திமுக கட்சி உள்ளிட்ட பிற கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு வருவதை உணர்ந்து பிஜேபியில் அவர்கள் தங்களை இணைத்து கொண்டுள்ளனர்.
4 பேர் நினைத்து விட்டால் குடியுரிமை வழங்கி விட முடியாது என்றும், அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும் .மாணவர், சிறுபான்மையினர் திமுகவின் பேச்சை நம்ப வேண்டாம். அவர்கள் நம் அப்பா, தாத்தா என்று நாம் தலைமுறையினரை ஏமாற்றி வந்தவர்கள்.இலங்கை தமிழர்கள் விருப்பம் என்னவோ அது படி நடக்கும்.மாணவர்கள் திமுகவை நம்பி போராட்டம் நடத்தாமல் எங்களுடன் வாருங்கள். திமுகவை கண்டித்து பாஜக சார்பில் 20-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…