பொங்கல் தொகுப்பில் தேங்காய் வழங்க வேண்டும் என பாஜக ஆர்ப்பாட்டம்..!
பொங்கல் பரிசுத்தொகுப்பில், கரும்பு போல் இலவசமாக தேங்காய் வழங்க கோரி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்.
பொங்கல் பரிசாக பொதுமக்களுக்கு ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி, கரும்பு மற்றும் சக்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பில், கரும்பு போல் இலவசமாக தேங்காய் வழங்க கோரி திருச்சி நாகை மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.