பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை மோடி அரசுக்கான இறுதி யாத்திரை – கே.பாலகிருஷ்ணன்
பாத யாத்திரையின் போது மதுரை பக்கம் வந்தால் எய்ம்ஸ் எங்கே என மக்கள் கேட்டால் அண்ணாமலை என்ன சொல்வார்? என கே.பாலகிருஷ்ணன் கேள்வி.
கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக மத்திய அரசு அடிக்கல் நாட்டியது. அதனை தொடர்ந்து அங்கு பணிகள் நடைபெறாத நிலையில், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் இதுகுறித்து குற்றசாட்டுகளை முன்வைத்தனர்.
இந்த நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை தொடங்காததை கண்டித்து என்.பி சு.வெங்கடேசன் அவர்கள் எங்கே எங்கள் எய்ம்ஸ் எனும் போராட்டத்தை நேற்று அறிவித்திருந்த நிலையில், தற்போது மதுரையில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில் எம் பி சு.வெங்கடேசன் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இது கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள் கையில் எங்கே எங்கள் எய்ம்ஸ் என்ற வார்த்தைகள் எழுதப்பட்ட ஒற்றை செங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிகழ்வில் பேசிய கே.பாலகிருஷ்ணன் அவர்கள், பாத யாத்திரையின் போது மதுரை பக்கம் வந்தால் எய்ம்ஸ் எங்கே என மக்கள் கேட்டால் அண்ணாமலை என்ன சொல்வார்? பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை மோடி அரசுக்கான இறுதி யாத்திரை என தெரிவித்துள்ளார்.