மாநில நிர்வாகிகளுடன் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஆலோசனை..!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று பாஜக மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று பாஜக மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை கமலாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆலோசனை கூட்டத்தில், கூட்டணி குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.