வட சென்னை மேற்கு மாவட்டம் இளைஞரணி சார்பில் அண்ணாமலையை வரவேற்று நாளைய முதல்வரே என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர். பின்னர், தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு பாஜக மாநில துணை தலைவராக அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் கண்டு தோல்வியை தழுவினார்.
சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில், தமிழக பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகன் இணை அமைச்சராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலை பாஜக மாநில தலைவராக அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, பாஜகவினர் பல இடங்களில் நாளைய முதல்வரே என அண்ணாமலையை வரவேற்று போஸ்டர் ஆங்காங்கே ஒட்டி வருகின்றனர்.
இந்நிலையில், வட சென்னை மேற்கு மாவட்டம் இளைஞரணி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில், ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே சட்டம் என தலைப்பிட்டு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இன்றைய தலைவரே, நாளைய முதல்வரே கொங்கு நாடு சிங்கமே தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…