பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி பேசிய கடம்பூர் ராஜுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி டிவீட் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு , பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து பேசியிருந்தார் எனவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் காவல்துறை பணிக்கு செல்வார் என்றும் குறிப்பிட்டு ஒருமையில் பேசியதாக, பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் தனது டிவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கத்துக்குட்டி கடம்பூர் ராஜு :
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், கடம்பூர் ராஜு பேசியது கண்டிக்கத்தக்கது. மீண்டும் ஆட்சி மாற்றம்ஏற்பட்டால் அரசியலில் இருந்து விலகி காவல்துறை பணிக்கு அண்ணாமலை சென்று விடுவார் என கூறுவது கடம்பூர் ராஜுவின் அரசியல் அநாகரீகத்தின் வெளிப்பாடு என்று விமர்சித்து, லஞ்சம் ஊழலை தவிர்த்து மாற்றத்திற்கான அரசியலை அண்ணாமலை உருவாக்கி வருகிறார். இது கடம்பூர் ராஜூ போன்ற அரசியல் கத்துகுட்டிகளுக்கு தெரியாது என கடம்பூர் ராஜுவை கத்துக்குட்டி என விமர்சித்து இருந்தார்.
அதிமுக – பாஜக :
அண்ணாமலை அவர்கள் கூறியது ஜெயலலிதாவை பெருமைப்படுத்தி தான் பேசி இருந்தார். அதனைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் நீங்கள் எப்படி அமைச்சராக இருந்தீர்கள் எனவும் விமர்சித்து இருந்தார். கட்சி காலி செய்து விடுவார் அண்ணாமலை என்று கூறியிருப்பதை கண்டிக்கிறோம். எங்கள் கட்சியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றும் உங்கள் கட்சியை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
நாவடக்கம் தேவை :
மைக் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று எண்ணாதீர்கள். நாவடக்கத்தோடு அரசியல் செய்ய முயற்சி செய்யுங்கள் இல்லையேல் காலம் பதில் சொல்லும் என தனது டிவிட்டர் பக்கத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜுவை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…
டெல்லி: ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக…