கடம்பூர் ராஜு நாவடக்கத்தோடு இருக்க வேண்டும்.! பாஜக துணை தலைவர் கடும் விமர்சனம்.!

Default Image

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி பேசிய கடம்பூர் ராஜுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி டிவீட் செய்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு , பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து பேசியிருந்தார் எனவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் காவல்துறை பணிக்கு செல்வார் என்றும் குறிப்பிட்டு ஒருமையில் பேசியதாக,  பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் தனது டிவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கத்துக்குட்டி கடம்பூர் ராஜு : 

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், கடம்பூர் ராஜு பேசியது கண்டிக்கத்தக்கது. மீண்டும் ஆட்சி மாற்றம்ஏற்பட்டால் அரசியலில் இருந்து விலகி காவல்துறை பணிக்கு அண்ணாமலை சென்று விடுவார் என கூறுவது கடம்பூர் ராஜுவின் அரசியல் அநாகரீகத்தின் வெளிப்பாடு என்று விமர்சித்து, லஞ்சம் ஊழலை தவிர்த்து மாற்றத்திற்கான அரசியலை அண்ணாமலை உருவாக்கி வருகிறார். இது கடம்பூர் ராஜூ போன்ற அரசியல் கத்துகுட்டிகளுக்கு தெரியாது என கடம்பூர் ராஜுவை கத்துக்குட்டி என விமர்சித்து இருந்தார்.

அதிமுக – பாஜக :

அண்ணாமலை அவர்கள் கூறியது ஜெயலலிதாவை பெருமைப்படுத்தி தான் பேசி இருந்தார். அதனைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் நீங்கள் எப்படி அமைச்சராக இருந்தீர்கள் எனவும் விமர்சித்து இருந்தார். கட்சி காலி செய்து விடுவார் அண்ணாமலை என்று கூறியிருப்பதை கண்டிக்கிறோம். எங்கள் கட்சியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றும் உங்கள் கட்சியை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

நாவடக்கம் தேவை :

மைக் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று எண்ணாதீர்கள். நாவடக்கத்தோடு அரசியல் செய்ய முயற்சி செய்யுங்கள் இல்லையேல் காலம் பதில் சொல்லும் என தனது டிவிட்டர் பக்கத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜுவை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்